நன்பர்களுக்கு வனக்கம் நான் இந்த தளத்தில் கொடுக்கும் தொகுப்புகள் அனைத்தும் பல்வேரு இனையதள்த்தில் இருந்து எடுக்கப்பட்டவை....
Wednesday, November 18, 2009
Monday, August 17, 2009
கூகில் உருவான கதை..!!
கூகிள் எப்படி உருவானது என்று நம்மில் பலருக்கு தெரியாது.அப்படி தெரியாதவர்களுக்காகவே இந்த பதிவு." நாங்க ஜாலியா படம் எடுக்கிறோங்க" என்று சொல்லிட்டு சென்னை 28 என்ற மிகப்பெரும் ஹிட் படம் ஒன்றை எடுத்திருந்தார் வெங்கட்பிரபு. அதுமாதிரிதான் "நாங்க ஜாலியா கம்பனி ஆரம்ம்பிக்கிறோம் " என்று ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறிய கம்பனிதான் இந்த கூகிள்.அந்த கம்பனிதான் இணைய உலகில் ஒரு விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது.
அமெரிக்கக் கம்பெனியில் பொறுப்பான பதவியில் இருக்கிறார். ஒரு நாள் அலுவலகத்தில் ஒரு பெரிய தப்பு செய்துவிட்டார். அவசரமாக முடிவு எடுத்து, ஆலோசிக்காமல் செயல்பட்டு, அகலக் கால் வைத்துவிட்டார். அவரால் கம்பெனிக்கு பல லட்சம் டாலர் நஷ்டம். தன் மடத்தனம் புரிந்தவுடன் தயங்கிக்கொண்டே முதலாளியிடம் போய் விஷயத்தைத் தெவித்தார்.
இந்த நிலையில் பாஸ் என்ன செய்வார்?
வேறொரு கம்பெனியாக இருந்திருந்தால் உடனே ஷெலுக்கு சீட்டுக் கிழிவதுடன், அவருடைய சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசர் வரை அத்தனை பேருக்கும் அண்டர்வேருடன் நிறுத்தி வைத்து பரேடு நடந்திருக்கும். ஆனால் ஷெலின் பாஸ் புன்னகையுடன், ""அப்படியா, தாங்க்ஸ்!'' என்றார்.
"" தயங்கித் தயங்கி, ஒரு முடிவும் எடுக்காமல் களிமண் மாதிரி உட்கார்ந்திருப்பவர்கள்தான் தப்பே செய்ய மாட்டார்கள். அடிக்கடி தடுக்கி விழுபவர்கள்தான் நம் கம்பெனிக்குத் தேவை. அவர்கள்தான் நாலு கால்
பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்!''
இந்த வித்தியாசமான கம்பெனிதான் கூகிள். அதன் வினோதமான முதலாளிதான் லாரி பேஜ். தன் கல்லூரித் தோழர் செர்ஜி ப்ன்னுடன் (படத்தில் இருவரும்...!!!)
லாரியும், செர்ஜியும் பிட்ஸா சப்ளை செய்து சம்பாதித்த காசில் மிச்சம் பிடித்து கம்ப்யூட்டர் வாங்கித் தங்கள் ஹாஸ்டல் அறையில் கம்பெனியை ஆரம்பித்தார்கள். பிறகு ஒரு வீட்டு கராஜை வாடகைக்கு எடுத்து ஆறு ஊழியர்களுடன் கம்பெனி நடத்தினார்கள். இன்றையத் தேதிக்கு கூகிளின் மதிப்பு பன்னிரெண்டாயிரம் கோடி டாலருக்கு மேல்.
கணிதத்தில் கூகால் (googol) என்ற ஒரு பெரிய நம்பர். ஒன்று போட்டு நூறு சைபர். எத்தனை கோடி வலைப் பக்கங்கள் இருந்தாலும் தேடித் தந்துவிடுவோம் என்ற அர்த்தத்தில் இந்தப் பெயரை வைத்தார்கள். ஆனால் நம் கதாநாயகர்களுக்கு ஸ்பெல்லிங் கொஞ்சம் தகராறு. (கூகால்) என்பதற்குப் பதிலாக (கூகிள்) என்று தப்பாக எழுதிவிட்டார்கள். யாரும் கவனிக்காததால் அந்தப் பெயரே நிலைத்துவிட்டது.
இதை உருவாக்கி முடித்ததும் இந்த தேடல் நுட்பத்தை Yahoo போன்ற பெரும் தலைகள் யாருக்காவது விற்கலாம் என முடிவெடுத்தனர்.வாங்க யாரும் இல்லாததால் 1998-ல் Google என்ற கம்பெனி உருவானது.1998 நவம்பரில்
தான் கூகிள் இணையதளம் முதலாக தலைக்காட்ட தொடங்கி யிருந்தது.ஆரம்பத்தில் பணம் ஒன்றும் அவ்வளவாய் சம்பாதிக்க இயலவில்லை.Sun-னும் IBM-மும் சில Sun Ultra II,F50 IBM RS/6000
செர்வர்களை தானமாக வழங்கியிருந்தனர்.2001-ல் யாகூ கூகிளை வாங்க விலைப்பேசி கொண்டிருந்ததாம்.தேடல் இயந்திரத்தின் வலிமை அறியா யாகூ ஒரு தேடல் இயந்திரத்துக்கு இத்தனை விலையா ($5 Billion) என ஒதுங்கி விட்டது.(அன்று யாகுவிடம் விலைபோயிருந்தால் கூகிள் என்னவாயிருக்கும்?...யூகிக்க கூட இயலவில்லை.)
நிறுவனத்தில் எட்டாயிரம் பேர் வேலை செய்கிறார்கள். எல்லாம் பொறுக்கி எடுத்த மணி மணியான என்ஜினீயர்கள். அவர்களுடைய கலிபோர்னியா ஆபீசில் போய்ப் பார்த்தால் ஏதோ பல்கலைக்கழகக் கட்டடத்துக்குள் நுழைந்துவிட்ட மாதிதான் இருக்கிறது. இளைஞர் பட்டாளம் ஏக இரைச்சலாகச் சிரித்துக் கொண்டு அடித்துக் கொண்டு கானா பாட்டுப் பாடிக் கொண்டிருக்கிறது. வராந்தாவில் ஊழியர்கள் வளர்க்கும் செல்ல நாய்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் டேபிள் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். மடியில் குழந்தையை வைத்துக் கொண்டே வேலை செய்யும் தாய்மார்கள், மூடு வருவதற்காகப் பாட்டுக் கேட்கும், பியானோ வாசிக்கும் இளைஞர்கள்... ஆபீஸ் மாதிரியாகவா தெரிகிறது?
கூகிள் ஊழியர்களுக்கு கம்பெனி செலவில் சாப்பாடு, காப்பி இலவசம். கூகிள் கான்டீன் என்பது நம் மியூசிக் அகாதெமி கான்டீன் போல பிரபலமானது. அதைத் தவிர அலமாரி அலமாரியாக நொறுக்குத் தீனிகள், பழங்கள், பானங்கள். கொடுத்து வைத்தவர்கள், பிரித்து மேய்கிறார்கள்!
கூகிள் பிறந்த புதிதில் சர்ச் எஞ்சின் எனப்படும் வலைத் தேடல் இயந்திரமாக மட்டும்தான் இருந்தது. மசால் தோசை என்று தேடினால் இன்டர்நெட்டில் இருக்கும் கோடியோ கோடிக்கணக்கான தகவல் பக்கங்களில் புகுந்து புறப்பட்டுத் தேடி வினாடி நேரத்தில் விடை கொண்டு வந்துவிடும். இந்த மின்னல் வேகத் தேடல் டெக்னாலஜியைக் கண்டுபிடித்தவர்கள் பேஜும் பின்னும்தான். இதைச் செய்ய அவர்கள் பெரிய சூப்பர் கம்ப்யூட்டர்கள் எதையும் உபயோகிக்கவில்லை; சாதாரணமாகக் கடையில் கிடைக்கும் எட்டணா கம்ப்யூட்டர்களை ஏராளமான எண்ணிக்கையில் வாங்கிப் போட்டு அவற்றை ஒத்துழைக்க வைத்த சாப்ட்வேர் சாணக்கியத்தனம்தான் அவர்கள் செய்தது.
கூகிளில் வேலை செய்பவர்கள் எல்லோருக்கும் வாரம் நாலு நாள் ஆபீஸ் வேலை, ஒரு நாள் சொந்த வேலை. அதாவது, உங்களுக்கு ஏதாவது புது ஐடியா தோன்றினால் அதை முயற்சித்துப் பார்க்க கம்பெனி காசில் வசதி செய்து தருகிறார்கள். கூகிள் அறிமுகப்படுத்தியுள்ள பல புதுமையான சேவைகள் இப்படி ஆளாளுக்கு குருட்டாம்போக்கில் யோசித்து ஆரம்பித்து வைத்ததுதான். ""ஒவ்வோர் ஐடியாவும் ஒரு வைரம்; "தினப்படி வேலையில் பிசியாக இருக்கிறேன், யோசிக்க நேரமில்லை' என்பதனால் எந்த நல்ல ஐடியாவும் வீணாகிவிடக் கூடாது'' என்பது கூகிள் கொள்கை.
கூகிள் ஊழியர்கள் எல்லாரும் கிட்டத்தட்ட சுதந்திரமாக, தமக்குத் தாமே வேலை செய்துகொள்கிறார்கள். பின்கை கட்டிக் கொண்டு பின்பக்கம் உலாத்திக் கண்காணித்துக் கொண்டே இருக்கும் சூப்பர்வைசர்கள் கிடையாது. ""எவ்வளவுக்கு எவ்வளவு மானேஜ்மென்ட் இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் குறைந்துடும். ஃப்ரீயாக விட்டால்தான் எல்லாரும் பொறுப்பாக வேலை செய்வார்கள்'' என்கிறார்கள். (கார்ப்பரேட் சர்வாதிகாரிகளே! கவனித்தீர்களா?)
கூகிள் வருவதற்கு முன்னும் பற்பல தேடல் இயந்திரங்கள் இருந்திருக்கின்றன. அவற்றில் எல்லாம் ஒரே குறைபாடு, குப்பைத் தொட்டியிலிருந்து அள்ளி வந்த மாதிரி சம்பந்தா சம்பந்தமில்லாத வலைப் பக்கங்களையெல்லாம் பீறாய்ந்து கொண்டுவந்து போட்டுவிடும். தங்கள் வெப் சைட்தான் முதலில் வர வேண்டும் என்பதற்காக சர்ச் எஞ்சினை நயவஞ்சகமாக ஏமாற்றுவதற்குப் பலர் சதித் திட்டங்கள் வேறு செய்து வைத்திருந்தார்கள்.
கூகிள்தான் முதல் முதலாக பக்கங்களைத் தரப்படுத்தி மார்க் போட்டு உருப்படியான தகவல்களை முதலில் கொண்டு வந்து தர ஆரம்பித்தது. பேஜ் ராங்கிங் (Page ranking) என்ற இந்த டெக்னிக்கை கண்டுபிடித்தவர் லாரி பேஜ். ஒரு வலைப் பக்கத்தை நிறையப் பேர் சிபாரிசு செய்து இணைப்புச் சங்கிலி போட்டு வைத்திருந்தால், அதிலும் பெரிய மனிதர்கள் சிபாரிசு செய்தால் அதிக மார்க் என்பது இதன் தத்துவம். கூகிளையும் ஏமாற்ற முடியும்; ஆனால் கஷ்டம்.
கூகிள் ஆராய்ச்சிசாலை என்று புதிது புதிதாக என்னவோ கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
கூகிள் நியூஸ் என்பது உலகத்தில் உள்ள அத்தனை செய்திகளையும் ஒரே இடத்தில் தருகிறது;
கூகிள் மேப் என்ற சேவையில் அமெரிக்காவின் வரைபடம் மொத்தமும் வைத்திருக்கிறார்கள். ஏதாவது ஓர் ஏரியாவில் போய் நின்றுகொண்டு இங்கே பக்கத்தில் பிட்ஸா எங்கே கிடைக்கும் என்றால் உடனே காட்டுகிறது.
லட்சக்கணக்கான புத்தகங்கள் கொண்ட இலவச லைப்ரரி நடத்துகிறார்கள்.
பி.எச்டி மாணவர்கள் காப்பி அடிக்க ஆராய்ச்சிக் கட்டுரைகள் தேடித் தருகிறார்கள்.
பறவைப் பார்வையாக சாட்டிலைட்டிலிருந்து உலகத்தைப் பார்க்கவும் வசதி செய்திருக்கிறார்கள் (ஊரான் வீட்டு நெய்யே என்று இந்தியாவின் தலைப்பக்கம் கொஞ்சம் கிள்ளி பாகிஸ்தானுக்குக் கொடுத்திருப்பதுதான் பார்க்கச் சகிக்கவில்லை.)
கூகிள் பயண சேவையில் பஸ், ரயில் நேரங்கள், வழித் தடங்கள் சொல்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட ஸ்டாப்பில் அடுத்த பஸ் எப்போது வரும் என்பது வரை காட்டுகிறது (ஆழ்வார்பேட்டையில் அல்ல, அமெரிக்காவில்!). கூகிள் செவ்வாய் என்ற ப்ராஜெக்டில் செவ்வாய் கிரகத்தின் நுணுக்கமான போட்டோக்களை கலர் கலராக சேமித்து வைத்திருக்கிறார்கள்.
உங்களுக்கே சொந்தமாக இணையத்தில் ஓர் ஒண்டுக் குடித்தனம்- ஒரு வலைப் பக்கம் தேவை என்றால் ஐந்து நிமிடத்தில் அமைத்துக்கொள்ளலாம். டைப் அடிக்கத் தெரிந்தால் போதும்
Wednesday, August 5, 2009
காதல் கவிதைகள்
வாழ்த்துரை
யாருக்குப் பிடிக்காது மழை. மழைக்குப் பிடிக்காதவர்கள்தான் யார். அனைவருக்கும் மழை. அனைவரும் மழை. மழை தான் திறக்கிறது அனைத்தையும். மழையைத் திறப்பதே சிரமம். சூரியனைத் திறக்கிற சாவி மட்டும் கிடைத்தால் எளிது. அதுவும் ஒன்றுதானே இரண்டிற்கும். ஒன்று தானே இரண்டும். மழையில் சூரியன். சூரியனில் மழை. மழைச் சூரியன். சூரிய மழை. ஆண், பெண். இதன் சூட்சும விரல் பிடித்து நடந்தால் வரும்... காதல்.
காதல் வேறு ... மழை வேறா ....
எப்படி முடிகிறது இவர்களால், மழைக்காக ஒதுங்கி நிற்க. குடைகள் விரித்து மழைக்கு வலி செய்பவர்களை என்ன செய்யலாம். ஓடுகிற பேருந்துகளிலிருந்து ... வீட்டின் சன்னல்களிலிருந்து கைநீட்டி மழை கேட்காதவர்கள் யார். பூவாய், தளிராய், கூழாங்கல்லாய், பறக்கும் தும்பியாய், நகரும் நத்தையாய், குழந்தையின் காலடித் தடமாய் மழை வாங்கி ரசிக்கும் அனுபவமற்ற வாழ்க்கை ... என்ன வாழ்க்கை.
அண்ணாந்து இமைதிறந்த விழிகளின் மேல் வாங்குகிற மழைதான் காதல். அதன் சுகம் கொடுமையானது.
மழைக்குச் சமாளித்த எறும்புகளிடம்தான் கேட்க வேண்டும் அதனை. அத்தகைய எறும்புச் சொற்களின் சேமிப்பாகத்தான் இந்தக்காதல் உரையாடல்கள்.
சங்கர் - மழை செய்த குளத்தில் ... குமிழ்கள் பூக்கும் து¡றல் தெளித்து ... இசைத் தட்டுகள் வரைய சங்கீதமாகிறது ... மீண்டும் மீண்டும் மீண்டும் ... மழை.
- அன்புடன் அறிவுமதி
அழகான பொருட்களெல்லாம் உன்னை
நினைவுபடுத்துகின்றன, உன்னை
நினைவுபடுத்துகிற எல்லாமே
அழகாகத்தான் இருக்கின்றன. .
உன்னிடம் பேச எவ்வளவு
ஆசைப்படுகிறேனோ அவ்வளவு ஆசை
உன்னிடம் பேசுபவர்களிடமும்
பேசவேண்டும் என்பதில் .
ஆடம்பரமற்ற உடையில் சோம்பல் முறித்துக்
கொண்டு உன் அம்மாவிடம் பேசிக்
கொண்டிருப்பதை - உன் வீட்டு ஜன்னல்
கட்டியதெனக்கு.
சோம்பல் முறிக்கையில் எவ்வளவு
அற்புதமாய் இருக்கிறாய் நீ. அம்மாவிடம்
பேசிக்கொண்டிருக்கையில் எவ்வளவு
அழகாய் இருக்கிறாய் நீ. அதைவிட
என்னிடம்பேசிக் கொண்டிருக்கையில்
இன்னும் எவ்வளவு அழகாய் இருப்பாய் நீ.
அந்தக் காலையில் திரும்பிக்கூடப்
பார்க்காமல்தான் என் வாசலைக் கடந்து
போனாய் நீ. அதனாலென்ன... வாசலுக்குள்
வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போனதே
உன் நிழல்
நீ எவ்வளவு ஒருதலைப்பட்சமானவள்.
நடக்கையில் சிக்கிக்கொள்ளும் உன்
உடையுடன் சேர்ந்து என் மனமும் சிக்கிக்
கொள்கையில், நீயொ என்னை விட்டு விட்டு
உன் உடையை மட்டும் இழுத்துவிட்டுக்
கொண்டு போகிறாயே
எல்லோரையும் பர்க்க ஒரு பர்வையென்றும்
என்னை பார்ப்பதற்கு ஒரு பார்வையென்றும்
வைத்திருக்கிறாய்.
நீ சாய்வதற்கென்றே வைத்திருக்கும் என்
தோள்களில் யார்யாரோ தூங்கிச் சாய்கிறார்கள்
பயணத்தில்
என்னை காத்திருக்க வைக்கவாவது நீ என்
காதலியாக வேண்டும். கடைசி வரை வராமல்
போனால் கூட ஒன்றுமில்லை
சூரியனை ஒரு முறைகூட முழுசாகப்
பார்த்ததில்லை. ஆனால் அதுதான் சூரியன்
என்பதில் எப்போதும் சந்தேகம்
வந்ததில்லை. உன்னை எத்தனையோ முறை
பார்த்திருக்கிறேன்.ஆனால் உன்னைப்
பார்த்துக்கொண்டிருக்கும்போதே நீ தானா நீ
என்கிற சந்தேகம் மட்டும் வந்து
கொண்டேதான் இருக்கிறது
''நீ ரொம்ப அழகானவள"' என்று நண்பர்கள்
சொல்வதெல்லாம் உண்மையா பொய்யா
என்று உன் முகத்தை பார்த்து உறுதி செய்து
கொள்கிற நேரம்கூட உன்னை நான்
பார்த்ததில்லை. பார்க்கவிட்டால்தானெ உன்
கண்கள்
*நீ முத்தமிட்டுவிட்ட கையை
வைத்துக்கொண்டு ரொம்பவும்
அவஸ்தைப்படுகிறேன். எதையுமே தொட
மறுக்கிறது கை. 'அப்படியே புதுசாக
வைத்துக்கொள்; சின்னக் குழந்தை தன்
கைக்குள் பத்திரமாய் பதுங்க வைத்துக்
கொள்கிற மிட்டாய் மாதிரி என்னையும்
வைத்துக்கொள் ..' என்கிறது அந்தக் கை.
அழகான சின்னக் கோயில். வந்து நின்று
திரும்பிப் பார்க்கையில் ... அருகில் நீ.
இவ்வளவு அருகில் தனக்குப் பிடித்தவன்
தன்னைப் பார்த்துக்கொண்டிருப்பதைப்
பார்த்துவிட்ட நீ, தாங்கிக்கொள்ள முடியாமல்
உன் வெட்கத்தையெல்லாம் என்மீது
வீசியெறிந்தாய். "அய்யோ என்ன இவ்வளவு
பக்கத்துல நிக்கிற ... எட்டி நில்' என்று.
ஆனால் நான் நகர்ந்தால்" ஏய் பக்கத்திலேயே
இரு' என்று என் கையைப் பிடித்து
இழுக்கவும் செய்யும் உன் வெட்கம்.
ஆனாலும் விதவிதமாய் வெட்கப்படுகிறாய் நீ.
ரொம்ப நாட்களுக்குப் பிறகு உன்னைப்
பார்க்க வருகிறேன். "இப்போது எப்படி
வளர்ந்திருப்பாயோ' என்கிற ஆசையோடு
வந்து உன்னைப் பார்க்கையில் ... என்ன
அதிசயம் ... நீ அப்படியே இருந்தாய்! எப்படி
என்று ஆச்சரியத்துடன் கேட்டதற்கு 'நீ என்
அருகில் இல்லாதபோதும் உனக்காகக்
காத்திருக்கும்போதும் எனக்கேது வளர்ச்சி?'
என்கிறாய் புன்னகையோடு.
நான் எது கேட்டாலும் வெட்கத்தையே
தருகிறாயே ... வெட்கத்தைக் கேட்டால்
என்ன தருவாய்?
ஒரு கார்த்திகை இரவில்
விளக்குகளுக்கு நடுவே நிற்கும் உன்னைப்
பார்த்த பிறகு ... உன்னைக் காதலிக்கவே
பயமாய் இருக்கிறது.
நீ விளக்கேற்றினாய். விளக்கு உன் முகத்தை
ஏற்றியது.
உன் கண்களின் பார்வையிலிருந்து ...
விரல்களின் அசைவிலிருந்து ... கொலுசின்
ஓசையிலிருந்து தான் காதலை நான் கற்றுக்
கொண்டேன். ஆனாலும் உனக்காக நான்
கற்று வைத்திருக்கும் காதலையெல்லாம்
உனக்கு வழங்க ஆரம்பித்தால் தாங்க
முடியாது உன்னால்.
நீ என் கைகளுக்குள் இருக்கையில்
எனக்கொரு அழகான சந்தேகம் வந்தது.
எவ்வளவு பெரிய பெண் நீ ... இப்படி எடை
இல்லாமல் இருக்கிறாயே! பார் ...
காதலுக்குள்ளும் காதலிக்குள்ளும்
என்னவெல்லாம் புதைந்து கிடக்கின்றன!
கூந்தலில் பூவாசனை வீசும்; தெரியும்.
இந்தப் பூவிலோ உன் கூந்தல்
வாசனையல்லவா வீசுகிறது.
முதல் முறையாக ஒரு முறை உன் மடியில்
படுத்து நான் அழுதுவிட்ட போது ... ஏன்
என்று கேட்டாய். அதெல்லாம் எனக்குத்
தெரியாது. ஆனால் யார் மடியிலாவது படுத்து
அழவேண்டும் என்பது ரொம்ப நாள் ஆசை.
அது உன் மடியாயிற்று. அவ்வளவுதான்.
நீ தூங்குகிறாய் ... எல்லா அழகுகளுடனும்.
உன் கண்களை மூடியிருக்கும் இமைகளில்
கூட எனக்காக விழித்திருக்கிறது உன்
அழகிய காதல்.
சொல்லாமல் வந்துவிடுகிற மழையில்
நனைந்து வருகிற என்னை உன் நெஞ்சில்
சாய்த்து தலை துவட்டி விடவும் சாப்பிட்டு
அலம்பிய என் கையை உன்
சிணுங்கலுக்கிடையே துடைத்துக்
கொள்ளவும்தான் இந்தச் சேலைத் தலைப்பு
இவ்வளவு நீளமாய் இருக்கிறதா?
உன் மார்புகளுக்கு நடுவே படுத்துக்கொள்கிற
மாதிரி என்னை எப்படியாவது சின்னவனாய்
ஆக்கிவிடேன்.
நீ அழு ... சோகம் தாங்காமலோ
வலியினாலோ அல்ல. சந்தோஷம் தாங்க
முடியாமல். ஆனால் சிந்தும் ஒவ்வொரு
கண்ணீர்த்துளியும் என் மேல்தான் விழ
வேண்டும்.
செடியில் பூத்துக்கொண்டே உன் முகத்திலும்
பூக்க எப்படி முடிகிறது இந்தப் பூக்களால்.
உன்மேல் கோபப்படுகிறபோதெல்லாம் ...
கொஞ்ச நேரங்கழித்து ... ஏன் கோபித்தோம்
என்றிருக்கும். அப்போதெல்லாம் உன்
மேலிருக்கிற அன்பு இன்னும் அதிகமாகும்.
ஆனால் நீயோ ... இனிமே கோபம் வருகிற
மாதிரி எந்தத் தப்பும் செய்யமாட்டேன்
என்பாய். இல்லையில்லை ... தவறுகள்
செய்துகொண்டே இரு. அன்பு
அதிகரித்துக்கொண்டே இருக்கட்டும்.
அழகாய் நீ சிரிக்கிற முகத்தை விட ...
கண்ணீர் மிதக்கும் உன் முகத்தை ஒரு முறை
பார்த்தது மறக்கவே இல்லை எனக்கு.
அதைவிட அழகாய் நீ எப்போதும்
இருந்ததில்லை. ஆனால் இப்போது
இருக்கிறாய். என் விரலில் ஏற்பட்ட
காயத்துக்கு மருந்து போட்டுக்கொண்டு.
ஒரு நாளாவது கதவைத் தட்டிவிட்டு
உனக்காக காத்து நிற்கவேண்டும் என்று
ஆசைப்படுகிறேன். ஆனால் நீயோ நான்
தெருவில் வரும்போதே வாசலில் நின்று
எனக்காக உன் கண்களை நீட்டுகிறாய்.
ஒரு நாளாவது யார் என்று கேள்விக்குறியுடன்
கதவு திறந்து எட்டிப் பார்க்கும் உன்
முகத்தினைப் பார்த்துவிடவேண்டும் என்கிற
ஆசையை நீ நிறைவேற்றி வைக்கப்
போவதில்லை போல ... என்ன காதல்
மனைவி நீ?
உன்னைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும்
நான் தொட்டுவிடாமல் இருக்க ஒரு
வழி கண்டுபிடித்து வைத்திருக்கிறாய் நீ.
நான்உன்னைத் தொடுகையில், எப்படியோ
என் விரல்களில் உன் அங்கங்களை ஒட்ட
விடுகிறாய்.
வேறு பெண்கள்பற்றிய எண்ணம் எதுவும்
எனக்கு இல்லையெனினும் உன்
மார்ப்புகளைச் சுமந்திருக்கும் என் கைகளால்
எப்படித் தொட முடியும் இன்னொரு
பெண்ணை!
உனக்காகச் செய்ய நினைத்த எதையுமே
உன்னால்தான் செய்து முடிக்க
வேண்டியிருக்கிறது. வாழ்க்கையையும் கூட.
நாம் இருவரும் பார்வையில் பழக ஆரம்பித்த
நாட்களில் ... என்னையே பார்த்துக்
கொண்டிருப்பதை நான் பார்த்துவிட்டால் ...
நான் ஒன்றும் உன்னைப் பா¡க்கவில்லையே
... என்று கலங்கரை விளக்கு மாதிரி
முகத்தைத் திருப்பிக் கொள்வாய். ஆனால்
உன்னையே நான் பார்த்துக்கொண்டிருப்பதை
நீ பார்த்துவிட்டால் ... ஐயோ பாத்துட்டானே ...
என்கிற பதைப்பில் சட்டென்று திரும்புகிற
போதே கொட்டிவிடுகிறது காதலெல்லாம்.
சின்ன வயதில் சில நேரங்களில்
வெட்கப்பட்டிருக்கிறேன். ஆனால். அப்போது
வெட்கப்படுவதில் வெட்கப்படுவதைத் தவிர
வேறு எதுவும் இருந்ததில்லை. வேறு
ஏதாவது இருக்கும் என்பது கூட
அப்போதெனக்குத் தெரிந்ததில்லை.
இன்று மாலை ... பேசிக்கொண்டிருக்கையில்
சட்டென்று நீ என் கையைப் பிடித்துவிட்ட
போது ... உன் கைக்குள் இருக்கும் என்
பெண்மையிலும் ... வேண்டாம் இருக்கட்டும் ...
என்கிற காதலிலும் மாறி மாறித் தவித்த
தவிப்பில் ... அப்பா! வெட்கப்படுவதில்
என்னென்ன இருக்கிறது.
அதைப் பற்றி இந்த இரவில் இப்படித்
தனிமையில் அசைபோடுகிறபோது ... எனக்கு
எதற்காக மார்புகள் வளர்ந்திருக்கின்றன
என்பது புரிந்துவிட்டது. நீ மட்டும் இப்போது
என் அருகில் இருந்திருந்தால், நீ என்
கையைப் பிடித்ததற்கும் உன் கையை
விட்டுவிட்டு நான் ஓடிவந்ததற்கும் சேர்த்து,
உன்னை இழுத்து முத்தம் கொடுத்துவிட்டு ...
'களுக்' என்கிற வெட்கச் சிரிப்புடன் உன்
மார்பில் புதைந்துகொண்டிருப்பேன்.
உன்னிடம் எந்தக் கெட்டப் பழக்கமும்
கிடையாதென்பது எனக்கு மகிழ்ச்சிதான்
எனினும் வருத்தமாய் இருக்கிறது. நான்
சொல்லி நீ விட ஒரு கெட்டப் பழக்கம்கூட
இல்லையே உன்னிடம்.
சின்ன வயதில் ... தோல்வியை
விரும்பியதில்லை. போட்டிகளை
விரும்பினேன். இப்போது போட்டிகளை
விரும்புவதில்லை. ஆனால் தோல்விகளை
விரும்புகிறேன். அதுவும் உன்னிடம் மட்டும்
தோற்பதில் இவ்வளவு ஆனந்தம் இருக்கிறது
என்பதை உணர்த்தியவன் நீதான்.
என் தோல்வியை விட என்னைத்
தோற்கடித்தவன்தான் என்னை நேசிப்பவன்
என்பதை நினைக்கையில் எவ்வளவு
மகிழ்ச்சியாய் இருக்கிறது.
நாம் இருவரும் தனியாய் இருக்கையில் ...
இந்தக் கண்ணாடிக்கு ஏன் இத்தனை
கண்கள் முளைத்துவிடுகின்றன!
அன்றொரு நாள் நீ என் கையைப்
பிடித்தபோது உடைந்த வளையலை உடைந்த
மாதிரியே இன்னும் வைத்திருக்கிறேன்.
ஆனால் சற்றுமுன் நீ என்னைக்
கட்டிப்பிடித்தபோது கசங்கிய சேலையைக்
கசங்கியபடியே வைத்திருக்க முடியவில்லை.
உன் காதல் பற்றி எதுவும் தெரியாத இந்தச்
சேலையை வைத்துக்கொண்டு என்ன
செய்வது?
என்ன வேதனை ... என் இரண்டு
இதழ்களையும் கொண்டு உனக்கு ஒரு
முத்தம்தானே தர முடிகிறது.
உனக்கேன் இந்த மாதிரிஆசையெல்லாம்
வருகிறது? என் வளையலை உடைப்பது ...
கொலுசத் திருகாணியைக் கழற்றி விடுவது ...
கூந்தலில் இருக்கும் பூவைப் பறித்து உன்
கன்னத்தில் உரசிக் கொள்வது ... காதில்
தொங்கும் ஜிமிக்கியை ஆடவிட்டு
வேடிக்கை பார்ப்பது ...
ஆனால் ஒன்று ... சின்ன வயதிலிருந்து ...
இந்தத் தோடு ... வளையல் ... பூ ... கொலுசு ...
இதெல்லாம் எதற்காக அணிந்துகொள்ள
வேண்டும் ... என்று யோசித்து யோசித்து
விடை தெரியாத கேள்விக்கு உன்னால்தான்
விடை கிடைத்த மாதிரியிருக்கிறது எனக்கு.
உன் காதலியாய் இருந்தவரையில் ... நான்
உடலால் ஆனவளாகத்தான் இருந்தேன். உன்
மனைவியாக ஆனபின்னே ... உன்
விரல்களால் ஆனவளாக ஆகிவிட்டேன்.
இன்று நான் தரையில் படுக்கப் போகிறேன்.
வெறும் தரையிலா?
அப்போ ... உன் சேலையைக் கொடு.
கட்டியிருக்கேனே.
கொடுத்துட்டு ... என்னைக்கட்டிக்க.
ம் ... சேலை மாதிரி நீயும் சும்மா இருந்தா
தினம் கட்டிப்பேன்.
சேலை மாதிரி நானும் சும்மா இருக்கணுமா?
வேண்டாம்.
உனக்கு நான் விளையாட்டுப் பொருளாகி
விட்டேன். ஒரு விடுமுறை நாளில் ... நான்
குளித்து முடித்து சேலை மாற்றுகையில் ...
வந்து வம்பு செய்து ... நான் கட்டிவிடுகிறேன்...
என்றாய் ... உன்னிடமா தப்ப முடியும். ம் ம் ...
என்றேன். கற்றுக்கொடு என்றாய்.
இவ்வளவு ஆர்வமாகவும் ... இவ்வளவு
மெதுவாகவும் நீ கற்றுக்கொண்டது
இதுவாகத்தான் இருக்கும். நீ
கட்டி முடிப்பதற்குள் ... ஏய் உதைக்கணும்
உன்னை; சேலையைக்
கண்டுபிடித்தவனையும்.
உறக்கத்திலிருந்து சட்டென்று விழிப்பு வந்து
பார்த்தபோது ... அருகில் அமர்ந்து
என்னையே பார்த்துக்கெண்டிருந்தாய் நீ.
அப்புறம் விழிப்பு வராதா என்ன.
இரவில் நீ து¡ங்கிக்கொண்டிருப்பதை பார்க்க
வேண்டும் என்பதற்காகவே ஒரு விளக்கு
வாங்கி வந்திருக்கிறேன் ... என்று ஒரு நாள்
விளக்கொன்றை என் கையில் கொடுத்தாய்.
ச்சீ .. அதைப் பிடித்துக்கொண்டிருக்கவே
வெட்கமாய் இருந்ததெனக்கு.
நீ இல்லாத பகல் நேரங்களில் ... அந்த
விளக்கை எடுத்து வைத்துக்கொண்டு தினம்
என் புடவைத் தலைப்பால் துடைத்துக்
கொண்டிருப்பேன் ... இந்த அறையின்
சுவர்களில் கூட து¡சு படிந்துவிடாத போது
இந்த விளக்கில் மட்டும் எப்படி து¡சு படியும் ...
என்கிற கேள்வியுடன்.
நான் உன் மடியில் படுத்துக்கொள்கிற
நேரங்களை விட ... உன்னை என் மடியில்
படுக்க வைத்துக்கொள்கிற
நேரங்களுக்காகவே நான் வாழ்கிறேன். நீ
இருக்கும்போது சுமைகளற்று இருக்கும் என்
மடியும் மார்பும் நீ எழுந்து போனபின்
கனமாகிப் போகிறது.
"என் உதடுகளைக் காணவில்லை". உனக்கு
முத்தமிடுகையில்தான் தொலைந்திருக்க
வேண்டும். தேடிப் பிடித்துத் திருப்பிக்
கொடுத்துவிடு" என்கிறாய். உன்னிடம்
திருப்பிக் கொடுத்தால் மட்டும் என்ன ...
மீண்டும் என்னில் எங்காவது
தொலைக்கக்தானே போகிறாய்.
ஒரு நள்ளிரவில் படுக்கையிலிருந்து எழுந்து
பின் வாசல் திறந்து தோட்டத்தில்
புல்தரையில் அமர்ந்தாய். பனி கொட்டியது.
ஓடிப் போய் ஒரு போர்வை எடுத்து வந்து
உள் அருகில் அமர்ந்தேன். ஈரம் ஏந்திய
நிலா வெளிச்சம். ரொம்ப குளிர்.
போர்வையை உன் தலையில் போர்த்த
முயல்கையில் அதை வாங்கி து¡ர வைத்தாய்.
உன் முகத்தை இரு கைகளிலும் ஏந்தி ...
இப்படி பனியில் நனைந்தால் உடம்பு என்ன
ஆகும் ... என்றேன். அதற்குத்தான் நீ
இருக்கிறாயே ... என்றாய். உனக்கொரு
முத்தம் கொடுத்துவிட்டு உன் மடியில்
படுத்துக் கொண்டேன்.
உடம்புக்கு ஆகாது ... என்று
அம்மா சொல்லிய நேரங்களையெல்லாம்
நீ அனுபவித்துக் கொண்டிருக்கிறாய்.
மீண்டும் உன் தலையில் கை வைத்துப்
பார்த்தேன். ஈரம் போர்வை எடுத்த நீண்ட
என் கையைத் தடுத்தாய். ரொம்ப
ஈரமாயிடுச்சு ... என்ற என்னிடம் எதுவும்
பேசாமல் உன் மடியில் கிடக்கும் என்
நெஞ்சில் விரல் நீட்டினாய். அய்யோ ...
இப்படித்தான் சுளீர் சுளீ¡ என்று அடிக்கிறாய்
இந்த சில நாட்களாய். உன் காதலியாய்
இருந்து அனுபவித்ததை விட ஆயிரம் மடங்கு
அதிகமாய் உன் மனைவியாகி
அனுபவிக்கிறேன். வெட்கத்துடன் என்
மார்புச் சேலையை எடுத்து உன் தலையில்
போர்த்திவிட்டேன். அப்படியே என்னை
இழுத்து அனைத்துக் கொள்கிறாய். என்ன
செய்வேன் நான். அதிகமாய்ப் போனால்
அழலாம். அவ்வளவுதான்.
என்னை மட்டுமல்ல ... வாழ்கிறேன் என்கிற
பெயரில் இந்த மண்ணின் எல்லா
அழகுகளையும் ரசித்து ரசித்துச் சக்கையாய்
பிழிந்து போடுபவன் நீ. ஆனாலும் எல்லாமே
உனக்காகவே மீண்டும் உயிர்த்தெழுகின்றன.
நானும்தான்.
வரதட்சிணை எல்லாம் கேட்டு
உன்னைக் கொடுமைப்படுத்திவிட
மாட்டேன்.
ஆனால் அதைவிடக்
கொடுமையாய் இருக்கும்
என் காதல்.
கூந்தலில் பூவாசனை வீசும்; தெரியும்.
இந்தப் பூவிலோ உன் கூந்தல்
வாசனையல்லவா வீசுகிறது!
நீ கிடைக்கலாம் கிடைக்காமல் போகலாம்
ஆனால்உன்னால் கிடைக்கும்
எதுவும் எனக்கு சம்மதம்தான்..
எனது உறக்கத்தின் வாசலில்
நான் காவல் வைத்திருக்கிறேன்.
உனது கனவுகளை மட்டும் அனுமதிக்க..
நீ
வெயில் காரணமாக உன் முகத்தை
மூடி கொண்டாய்..
உன் முகத்தை பார்க்காத கோபத்தில்
சூரியன் எங்களை சுட்டெரிகிறது!!
நீ
சாய்வதற்கென்றே வைத்திருக்கும்
என் தோள்களில் யார்யாரோ
தூங்கிச் சாய்கிறார்கள் பயணத்தில்
உன் தைல விரல்களுக்கு
ஏங்குகின்றன என் தலைவலிகள்……
உன்
பிறந்த நாளையும் பிறந்த நேரத்தையும்
காட்டுகிற ஒரு கடிகாரம்
என் அறையிலிருக்கிறது.
"கடிகாரம் ஓடலியா?" என யாராவது கேட்டால்
சிரிப்புத்தான் வரும்..
அது காலக் கடிகாரம் அல்ல என் காதல் கடிகாரம்
மரத்தின் கீழ் உனக்காக காத்திருக்கையில்
மரமேறிப் பார்க்கும் மனசு
எனக்கு லீப் வருடங்கள் ரொம்ப பிடிக்கும்
அந்த வருடத்தில்தான் இன்னும் ஒரு நாள்
அதிகமாய் வாழலாம் உன்னுடன்!
இதற்கு முன் யாராவது
இப்படி உன்னைப் பார்த்ததுண்டா?
எப்படி?
“ ஹய் பொம்மை ! “
என்று !
உன் பாட்டியின் நினைவுநாளில்
நீ ஒரு சின்ன இலையில் சாதத்தை வைத்துக்கொண்டு
‘ கா கா ‘
என கத்துவதைப்பார்த்ததும்
‘"அட...
குயில் கா கா ன்னு கூவுதே “
என்றேன்.
நீ இலையை கிணற்று மேல் போட்டுவிட்டு
மானைப்போல் ஓடி மறைந்தாய்.
சீப்பெடுத்து உன் கூந்தலைச் சீவி
அலங்கரித்துக்கொண்டாய்..
அந்த சீப்போ உன் கூந்தலில்
ஒரு முடி எடுத்து தன்னை அலங்கரித்துக்கொண்டது.
சொல்லாமல் வந்த புயல்மழை நாளில்
நீயும் உனது தந்தையும் வருகையில் குடைக்கம்பி
உன் தலையில் குத்திவிட்டதற்காக
உன் தந்தையைப்பார்த்து கெஞ்சலாய் நீ
சுழித்த முகச்சுழிப்பில் இன்னொரு
புயல் உருவாகி மழையால் அடித்துவிட்டு போனது
என்னை மட்டும் .!
இவை இப்படித்தான் என்று
நான் நினைத்துக்கொண்டிருப்பவற்றை கூட
எவ்வளவு சுலபமாய் பொய்யாக்கிவிடுகிறாய்?
உதிர்வதென்பது எப்போதும் சோகமானதுதான்
எனகின்ற என் நினைப்பை உன் உதட்டிலிருந்து உதிர்கிற
ஒரு சின்ன புன்னகை பொய்யாக்கிவிடுகிறதே !
எல்லோரும் கோயில் சிற்பங்களை
ரசித்துக்கொண்டிருந்தார்கள் சிற்பங்களெல்லாம்
உன்னை ரசித்துகொண்டிருந்தன !
ஒரே ஒரு முறைதான் என்றியும் உன் நிழல்
என் மீது பட்டதால் நான் ஒளியூட்டபட்டு
கவிஞனானேன்!
அழகான பொருட்கள் எல்லாம் உன்னை
நினைவு படுத்துகின்றன.
உன்னை நினைவு படுத்தும் பொருட்கள்
எல்லாமே அழகாகத்தான் இருக்கின்றன..
நீ எந்த உடையிலும் கவிதையாகத்தான் இருக்கிறாய்
சேலை கட்டியிருக்கும் போதுதான் தலைப்புடன் கூடிய கவிதையாகிறாய்.
என் வீடு எனக்குப் பிடித்திருகிறது
எதிர் வீட்டில் நீ இருப்பதால்!
உன் கையசைவிற்காகவே எத்தனைமுறை
வேண்டுமானாலும் உன்னிடமிருந்து விடை பெறலாம்!
நீ தூங்குகிறாய்... எல்லா அழகுகளுடனும்.
உன் கண்களை மூடியிருக்கும்
இமைகளில் கூட எனக்காக விழித்திருக்கிறது
உன் அழகிய காதல்.
என்னை காத்திருக்க வைக்கவாவது
நீ
என் காதலியாக வேண்டும்..
கடைசிவரை வராமல் போனால்கூட ஒன்றுமில்லை.
காதலிக்கும்போது கவிதைதான் கிடைக்கிறது.
காதலிக்கப்படும்போதுதான் வாழ்க்கை கிடைக்கிறது.
‘என்னை எங்கு பார்த்தாலும் ஏன் உடனே நின்று விடுகிறாய்?’
என்றா கேட்கிறாய்.
நீ கூடத்தான் கண்ணாடியை எங்கு பார்த்தாலும்
ஒரு நொடி நின்று விடுகிறாய்
உன்னைப் பார்க்க உனக்கே
அவ்வளவு ஆசை இருந்தால்
எனக்கு எவ்வளவு இருக்கும்!
‘போதும் பார்த்தது கண் பட்டுவிடப்போகிறது’ என்றாய்
ச்சே…ச்சே..உன்னைப் பார்த்தால்
என் கண்களாவது பட்டுப் போவதாவது
துளிர்த்துக்கொண்டல்லவா இருக்கின்றன.
கரையில் நின்றிருந்த உன்னைப் பார்த்ததும்
கத்தி விட்டன கடல் அலைகள்…
‘கோடான கோடி ஆண்டுகள் எம்பி எம்பிக் குதித்து
கடைசியில் பறித்தே விட்டோமா நிலவை’ என்று.
தான் வரைந்த ஓவியத்தை கடைசியாக ஒரு முறை
சரி செய்யும் ஓவியனைப் போல் நீ ஒவ்வரு முறையும்
உன் உடைகளை சரி செய்கிறாய்
காற்றோடு விளையாடிக் கொண்டிருந்த
உன் சேலைத் தலைப்பை இழுத்து
நீ இடுப்பில் செருகிக்கொண்டாய் அவ்வளவுதான்…
நின்றுவிட்டது காற்று.
ரயில் பயணங்களின் போது...
வீட்டு ஜன்னல்களின் வழியே
கையசைக்கும் குழந்தைகளுக்கு
பதில் கையசைக்கும் கைகள் எனக்கில்லை
திட்டமிட்டு யாரையும் ஏமாற்றுகிற துணிவு
என்னகில்லையென்றாலும் ஏதாவத்டு உணவகத்திலோ
மருந்தகத்திலோ கொடுத்த பணத்தைவிட அதிகமாக தந்தால்
பேசாமல் வாங்கி வருபவனில் நானும் ஒருவனே
எப்படியேனும் எல்லோரிடமிருந்தும் தப்பித்து
வீடு வந்து கண்மூடினால் என்னிடம் மாட்டிக் கொள்கிறேன்
நாள் முழுவதும் கூந்தலிலிருந்த பூவை
எந்தச் சலனமுமின்றி எடுத்தெரிந்துவிட்டு
வேறு பூவைச் சூடிக் கொள்ள எப்படி முடிகிறது
இந்தப் பெண்களால்
அவ்வளவு தொலைவிலிருந்து குழந்தைகள் சாப்பிட உதவும்
நிலவில் மனிதன் உயிர் வாழமுடியாது என்பதை
எப்படி நம்புவது?
'அ'-வுக்கு முந்தி எழுத்துக்கள் இல்லையெனினும்
'அ'- எழுதப் பழகிய என் கிறுக்கல்களெல்லாம்
'அ'-வுக்கு முந்திய எழுத்துக்களே
நான் யாரைப் பார்க்கப் போனாலும்
அவர் தனிமையில் இருந்துவிடக்கூடாதே
என்கிற பயம் எனக்கு
தனிமை கலைக்கப்படுகிறபோது ஏற்படும்
இழப்புகளை நான் அறிவேன்
அற்புதமான காதலை மட்டுமல்ல அதை உன்னிடம்
சொல்ல முடியாத அதி அற்புதமான
மௌனத்தையும் நீதான் எனக்குத் தந்தாய்.
யாராவது ஏதாவது அதிர்ச்சியான
செய்தி சொன்னால் அச்சச்சோ என்று
நீ நெஞ்சில் கைவைத்துக் கொள்வாய்.
நான் அதிர்ச்சி அடைந்துவிடுவேன்
என்னை உடைப்பதற்காகவே என் எதிரில்
சோம்பல் முறிப்பவள் நீ
என்னை எங்கு பார்த்தாலும் ஏன் உடனே நின்று விடுகிறாய்?
என்றா கேட்கிறாய். நீ கூடத்தான் கண்ணாடியை எங்கு பார்த்தாலும் ஒரு நொடி நின்று விடுகிறாய்.
உன்னைப் பார்க்க உனக்கே அவ்வளவு ஆசை இருந்தால்
எனக்கு எவ்வளவு இருக்கும்...
நீ இல்லாத நேரத்திலும் உன் இருக்கையில் அமர்ந்திருக்கிறது
உன் அழகு. .....
ஊரிலேயே நான்தான் நன்றாக பம்பரம் விடுபவன் ஆனால் நீயோ என்னையே பம்பரமாக்கிவிடுகிறாய் ......
நீ யாருக்கோ செய்த மௌன அஞ்சலியைப் பார்த்ததும்...
எனக்கும் செத்துவிடத் தோன்றியது..
உன்னைக் காதலித்துக் கொண்டிருக்கும்போது
நான் இறந்துபோவேனா என்பது தெரியாது.
ஆனால் நான் இறக்கும்போதும் உன்னைக் காதலித்துக்
கொண்டிருப்பேன் என்பது மட்டும் தெரியும்